முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை சிறப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மெல்பர்ன்,ஜன.20 - ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் வெண்கலை சிலை திறக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைக்கு உலகம் முழுவதும் புகழ், மதிப்பு, மரியாதை அதிகரித்து வருகிறது. அகிம்சை என்ற ஆயுத்தால்தான் மாபெரும் பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவித்தார். அவருக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள அடிலைடு பல்கலைக்கழகத்தில் வெண்கலத்திலான சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 1.95 மீட்டராகும். சிலை சிறப்பு விழா நேற்று மிகப்பிரமாண்டமான முறையில் நடந்தது. சிலையை தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜாய் வெல்த்திரில் திறந்துவைத்தார். சிலை திறப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தர், மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த சிலையை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அரசு பரிசாக கொடுத்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த பிரபல சிற்பி கெளதம் பால் வடிவமைத்துள்ளார். இவர் கொல்கத்தாவில் சிற்பக்கூடம் வைத்துள்ளார். அந்த கூடத்தில் இருந்து ஏராளமான சிற்பங்கள் உலகம் முழுவதும் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சிலையை திறந்து வைத்து பேசிய ஜாய் வெத்ரில், மகாத்மா காந்தியின் இந்த வெண்கலை சிலையானது இந்தியாவுக்கும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் தொடர்பை வெளிக்காட்டும் வகையில் உள்ளது என்றார். உலகத்திலேயே இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக விளங்குகிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் கல்வியில் இருநாடுகளும் ஒருமித்த கருத்துடன் மட்டுமல்லாது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார். மகாத்மா காந்தியின் சிலையில் தத்துவ வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இந்த நவீன வரலாற்றில் மகாத்மா காந்தி முக்கிய பங்கு வகிக்கிறார். அவருடை வெண்கல சிலையை எங்களுக்கு இந்திய அரசு பரிசாக கொடுத்திருப்பதை பெருமையாக கருதுகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேசுகையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்