முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ரேபல் நடால், வோஸ்னியாக்கி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், ஜன. - 21 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் ரேபல் நடால் மற்றும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் வோஸ் னியாக்கி இருவரும்3 -வது சுற்றில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வர்த்தக நகர்களில் ஒன்றான மெல்போர் னில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது.  கிராண்ட் ஸ்லாப் போட்டியான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரரான ரேபல் நடாலும்சுலோவேக்கியா  நாட்டைச் சேர்ந்த லூகாஸ் லேக்காவும் மோதினர்.
3செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில், உலகின் 2-ம் நிலை வீரரான நடால் சிறப்பாக ஆடி, 6 - 2, 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் லூகாசை வீழ்த்தி 4 -வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ரேபல் நடால் உலக முன்னாள் நம்பர் - 1 வீரராவார். தவிர, கடந்த 2009 -ம் ஆண்டு இங்கு சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார்.  சுவிஸ் நாட்டின் முன்னணி வீரரான ரோஜர் பெடர
ரும், குரோசியாவின் இளம் வீரரான கர்லோவிக்கு  ம் மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பலப்ப ரிட்சை நடத்தினர்.  இதில் அனுபவமிக்க வீரரான பெடரர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 7 - 6(8), 7 - 6, 6 - 3 என்ற செட் கணக்கில் வெ ற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆ
ட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும், ருமேனிய வீராங்கனை மோ னிகாவும் மோதினர்.
இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான கரோலின் அபாரமாக ஆடி, 6 - 3, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகு தி பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்