முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசின் வாக்குறுதி அரசியல் சாசனத்திற்து எதிரானது

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

டேராடூன், ஜன. 25 - உத்தர பிரதேசத்தில் முஸ்லீம்களுக்கு 9 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற காங்கிரசின் உறுதிமொழி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று பா.ஜ.க. தலைவர் உமாபாரதி கூறினார். உத்தர பிரதேசம் டேராடூனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வழங்கியிருக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த முயற்சியை பா.ஜ.க தீவிரமாக எதிர்க்கும். மத்திய அரசு வழங்கிய நிதியை உத்தரகாண்ட் மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் கூறுவது பொய். மத்திய அரசு நிதியை அனுப்பியது உண்மைதான். ஆனால் அந்த நிதியை பயன்படுத்துவதற்காக மாநில அரசு தயாரித்து வழங்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்படாததால்தான் அந்த நிதியை பயன்படுத்த முடியவில்லை. ஊழல் புகார்களுக்கு ஆளான தலைவர்களை எல்லாம் காங்கிரஸ் காப்பாற்ற முயற்சிக்கிறது. இது போன்று பா.ஜ.க ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்