முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக் பாட்ஷா மர்மச்சாவு - சி.பி.ஐ. விசாரணை கோரும் மனு ஏற்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.18 - ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவின் கூட்டாளி சாதிக் பாட்ஷாவின் மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரும் மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமியாக இருந்தவர் சாதிக் பாட்ஷா. இவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். வெறும் ரூ.ஒரு லட்சம் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது ரூ.100 கோடி முதலீட்டுடன் செயல்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசா லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் ஆயிரக்கமக்காண கோடி ரூபாயில் ஒரு பகுதி இந்த ரியல் எஸ்டேட்டிற்கு திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரித்து வந்தது. மேலும் அப்ரூவராக சாதிக் பாட்ஷா மாறலாம் என்று கூறப்பட்டது. 

இந்தநிலையில் சாதிக்பாட்ஷா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சாதிக்பாட்ஷாவின் சாவில் மர்மம் உள்ளது. அதனால் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடுகையில் சாதிக் பாட்ஷாவின் மர்மச்சாவு ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் அவரது மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்