Idhayam Matrimony

ராஜநாக விஷத்தை கடத்த முயற்சி 2 வெளிநாட்டு வாலிபர்கள் கைது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜன. - 30 - கொச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தப்படவிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள ராஜநாக விஷத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வெளிநாட்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்வதற்காக இரு தினங்களுக்கு முன் 2 வெளிநாட்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவருடைய உடமையை ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஸ்கேன் செய்த போது சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவன ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுங்கத்துறை அதிகாரிகள் வந்து அந்த வாலிபரின் பையை சோதனையிட்டனர்.  அதில் ஒரு ரகசிய அறையில் 16 ஆணுறைகளில் திரவப் பொருள் இருந்தது. அது போதைப் பொருளாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதினர். தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அது ராஜநாகத்தின் கொடிய விஷம் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ஜிம்மி வின்சென்ட், நைஜீரியாவை சேர்ந்த ஓடியாஸ் ஆஸ்டின் என்பது தெரியவந்தது. இதில் ஆஸ்டின் தப்பியோடி விட்டார். ஆனால் கண்காணிப்பு கேமிராவில் ஆஸ்டினின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சென்னைக்கு ரயில் மூலம் சென்றது தெரியவந்தது. உடனே சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பிடிபட்டார். கைப்பற்றப்பட்ட பாம்பு விஷத்தின் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்