முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனி கேப்டன் பதவியை இழக்கிறார் டெஸ்ட் போட்டிக்கு சேவாக் கேப்டன்?

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. - 30 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிய வருகிறது. தோனிக்கு பதிலாக இந்திய அணியின் அதிரடி துவகக்க வீரரான சேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை பி.சி.சி.ஐ.யின் பரிசீலனையில் உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தி ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. இந்தப் பிரச்சினையை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய அணி கேப்டன் தோனி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடியது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸி. அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. எனவே கேப்டன்ஷிப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னதாக இந்திய அணி இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் செய்து விளையாடி யது. அந்த தொடரிலும் டெஸ்ட் போ  ட்டியில்4 - 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்து வெளிநாட்டுத் தொடர்க ளில் இந்திய அணி 8 - 0 என்ற கணக்கில் தோற்று இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே கேப்டன் தோனியின் சுமையை குறைப்பது குறித்து பி.சி.சி.ஐ. ஆலோசித்து வந்தது. இதில் டெஸ்ட் போட்டிக்கு வேறு கேப்டனை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் தோனியின்  கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும், ஒரு நாள் மற்றும் 20 -க்கு 20 போட்டிக்கு அவரே கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழ் மூத்த வீரர்களான டெண்டுல்கர், டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் ஆடத் தயாராக உள்ளனர். இதில் பிரச்சினை எதுவும் கிடையாது.  அதே நேரம், சேவாக் கேப்டனாக டெஸ்ட் போட்டிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் மூத்த வீரர்கல் அவரது தலைமையில் ஆடுவார்களா? இதில் எதுவும் பிரச்சினை எழுமா? என்பது குறித்தும் பி.சி.சி.ஐ. பரிசீலித்து வருகிறது.  இந்திய அணியின் துவக்க வீரரான வீரேந்தர் சேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை தாங்கி ஐ.பி.எல். போட்டித் தொடரில் விளையாடினார். ஆனால் அவரது கேப்டன்ஷிப் தன்மை பி.சி.சி.ஐ.க்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது. 

மேலும், அதிரடி வீரரான சேவாக்கிற்கு ம், கேப்டன் தோனிக்கும் இடையே ஈகோ பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

தவிர, மூத்த வீரர்களான ராகுல் டிராவி ட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோரது பேட்டிங் திறன் மங்கி விட்டதாகவும், எனவே அவர்களுக்கு பதில் இளம் ரத்தத் தை பாய்ச்சுவது குறித்தும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. 

பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் தற்போது காயம் அடைந்து மறுவாழ்வு சிகிட்சை எடுத்து வருகிறார். அவர் உட ற் தகுதி பெறும் பட்சத்தில் உடனடியா க டெஸ்ட் அணியில் சேர்க்கப்படலா ம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா  மற்று ம் சேத்தேஷ்வர் பூஜாரா ஆகியோரை டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் சேர்ப்பது குறித்தும் பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் ஆலோசித்து வருகின்றன. 

டெஸ்ட் போட்டிகான இந்திய அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்திய அணி நாடு திரும்பியதும் தான் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்க ள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்