முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜிக்கு பிரணாப் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, பிப்.7 - பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அத்தியாவசிய பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகளை அகற்றி அதை சுலபமாக்கும் பொருட்டு சந்தையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராட்டி இருக்கிறார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மம்தாவை பாராட்டித்தள்ளினார். கடுமையான பண வீக்கம் ஏற்பட உணவுப் பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகளும் ஒரு காரணம். இதில் மாநில அரசுகள் ஒரு சாதகமான ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற வேண்டும். அந்த வகையில் மேற்கு வங்கத்தை போல சில மாநிலங்கள் நல்ல பங்காற்றி உள்ளன. மம்தா பானர்ஜியே நேரடியாக தலையிட்டு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் மூலம் உணவுப் பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு கடந்த இரண்டு பட்ஜெட்டுகளில் நான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. பணவீக்கம் அபாய அளவில் இருந்து அதாவது இரட்டை இலக்க அளவில் இருந்து தற்போது குறைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது இது 7.47 சதவீதமாக உள்ளது. இது மேலும் குறையும் என்று நம்புகிறேன். 

இவ்வாறு பிரணாப் முகர்ஜி அந்த கருத்தரங்கில் பேசினார். சமீபத்தில் மம்தா பானர்ஜி எழுதிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதில் அவர் பிரணாப் முகர்ஜியை தனது மூத்த சகோதரர்போல் என்று குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இப்போது பிரணாப் முகர்ஜி பதிலுக்கு மம்தாவை பாராட்டியுள்ளார். பாராட்டுகள் தொடரட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்