முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச பட விவகாரம்: காங்கிரசுக்கு சதானந்தா பதில்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,பிப்.10 - ஒரு சாதாரண விஷயத்தைக்கூட அரசியலாக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சியானது எங்களுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் கற்பிக்க தேவையில்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்தா கவுடா பதில் அளித்துள்ளார். 

கர்நாடக மாநில சட்டசபை நடந்துகொண்டியிருந்தபோது ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவத்தையொட்டி கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதற்கு முதல்வர் சதானந்தா கவுடா கடுமையாக பதில் அளித்துள்ளார். ஒரு சிறு சிறு பிரச்சினைகளைக்கூட காங்கிரஸ் அரசியலாக்க முயற்சி செய்கிறது. ஒழுக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள தேவையில்லை. ஒழுக்கத்திற்கும் காங்கிரசுக்கும் வெகுதூரம். காங்கிரஸ் கட்சியில் இந்த மாதிரி 25 குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் எங்களுடைய அமைச்சர்கள் 3 பேரும் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டனர். அதோடுமட்டுமல்லாது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த 3 அமைச்சர்களும் கோரியுள்ளனர். அப்படியிருக்க என் தலைமையிலான பா.ஜ.அரசை ராஜினாமா செய்ய சொல்லுவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்றும் முதல்வர் சதானந்தா கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபையில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சட்டசபை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை காங்கிரஸ் பொருமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியானது நாட்டை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் செக்ஸ் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பதையும் அந்த கட்சி எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் சதானந்தா கவுடா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago