முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முந்தி செல்வதில் மோதல்: பஸ் டிரைவர் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. பிப்.12 - திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் சந்தரம்(35). இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நெடுங்குளத்திற்கு பஸ்சை ஓட்டிச்சென்றார். அப்போது காந்தி மார்க்கெட் அருகே வந்தபோது ஒரு லாரியும் புறப்பட்டது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் பஸ்சை உரசியவாறு சென்றதால் லாரி டிரைவருக்கும், பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுந்தரம் பஸ்சை நிறுத்தி லாரி டிரைவரை கண்டித்தார். அப்போது பஸ்சை விட்டு கீழே வந்தால் உன்னை லாரியை ஏற்றி கொன்று விடுவேன் என்று லாரி டிரைவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சுந்தரம் காட்டூர் பகுதிக்கு சென்றபோது தன்னுடன் மோதலில் ஈடுபட்ட லாரி டிரைவருக்காக காந்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தவழியே தகராறு செய்த லாரி டிரைவர் லாரியுடன் வருவதை கண்டார். பஸ்சை நிறுத்தி விட்டு நடுநோட்டிற்கு சென்று லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஏற்கெனவே மோதலில் இருந்ததால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் பஸ் டிரைவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இந்த சம்பவத்தில் பஸ் டிரைவர் சுந்தரம் அங்கேயே துடிதுடித்து இறந்து விட்டார். 

தகவல் அறிந்ததும் திருவெறும்nullர் போலீசார் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசார் வருவதை கண்டதும் டிரைவரை பிடித்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சை குடந்தை சரகத்தை சேர்ந்த அப்துல் ஹமீது மகன் முகமது காசிம்(29) என்பது தெரியவந்தது. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு நாள்தோறும் ஏற்றிசெல்வது தெரியவந்தது. 

திருச்சியில் நேற்று பட்டப்பகலில் பஸ்டிரைவரை லாரி டிரைவர் தனது லாரியில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்