முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை அரசை கண்டித்து பி.எச்.பாண்டியன் தலைமையில் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி, பிப்.- 14 - புதுவை உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்தில் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புயல் தாக்கி 40 நாட்களுக்கு மேலாகியும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை அரசால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை, முழுமையாகவும், பகுதியாகவும் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் கல் வீடுகளுக்கான நிவாரணத்தொகை, மீன் பிடி சாதனங்களுக்கான நிவாரணத்தொகை என எந்த உதவித்தொகையும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து காணப்படுகிறது. மொத்தத்தில் மக்கள் அமைதியின்றி நிம்மதியின்றி மரணபயத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணத்தொகைகளை வழங்காத, சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்துக் கொண்டிருக்கின்ற புதுவை அரசை கண்டித்தும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழக புதுச்சேரி மாநில கழகத்தின் சார்பில் வருகின்ற 15-ந் தேதி(நாளை) காலை 9.30 மணியளவில் கவர்னர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இந்த ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளர் பி.என்.பாண்டியன் தலைமையிலும், புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இதில் புதுவை மாநில கழக நிர்வாகிகளும், காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ பேரவை உட்பட பிற அணி நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்