முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி இருப்பதைகாட்டுகிறது: ராகுல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

உன்னாவ் (உ.பி.) பிப்.- 16 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாகவும் அதிகமாகவும் ஓட்டுப்பதிவு நடந்திருப்பதற்கு காரணம் இளைஞர்கள் அதிக அளவில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதுதான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் 3 கட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. பெரிய மாநிலமாகவும் பெரிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவதாலும் ஓட்டுப்பதிவின்போது வன்முறை சம்பவங்கள், தில்லுமுல்லுகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக ஓட்டுப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தலின்போது 56 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. சுமார் 64 சதவீதம் ஓட்டுக்கள் வரை பதிவாகியது. இரண்டாவது கட்ட தேர்தலில் ஒரு சில சிறு சிறு வன்முறை சம்பவங்களை தவிர பெரிய அளவில் வன்முறை சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஓட்டுப்பதிவும் 62 சதவீதம் வரை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இது குறித்து 4-வது கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக பதிவாகி இருப்பதற்கு இளைஞர்கள் அதிக அளவில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதுதன் அறிகுறி என்றார். 3 கட்ட தேர்தலிலும் இளைஞர்கள் திரண்டு காங்கிரசுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். அதனால்தான் 62 முதல் 65 சதவீதம் வரை ஓட்டுக்கள் பதிவாகி இருக்கின்றன என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்