முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்மன்ஸ் சதத்தால் பஞ்சாப் அணியை பந்தாடியது மும்பை

வியாழக்கிழமை, 22 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மொஹாலி, மே 23 - மொஹாலியில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. சிம்மன்சின் சதத்தால் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி தனது 5-வது வெற்றியை ருசித்தது. 

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தெர்ந்தெடுத்தது. துவக்க வீரர் சேவாக் ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசி தனது கணக்கை ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது ஓவரின் சேவாக் ரன் அவுட் ஆனார். தொடர்ந்த வோஹ்ரா மற்றும் மார்ஷ் இணை 7.1 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. 10-வது ஓவரில் மார்ஷ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் வொஹ்ரா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் 2 ரன்களுக்கு வீழ்ந்து அதிர்ச்சியளித்தார். 

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய மும்பை, பந்துவீச்சை சீராக்கி ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தியது. 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்த பஞ்சாப் 15-வது ஓவரின் முடிவில் 107 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. களத்திலிருந்த படேல் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் கேப்டன் பெய்லியிடம் அணியை நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு வந்தது. பெய்லி தனக்கு வந்த பொறுப்பை சிறப்பாகக் கையாண்டு 39 முக்கிய ரன்களைச் சேர்த்தார் . 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. 

156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இவக்கொடு களமிறங்கிய மும்பை தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ் மற்றும் ஹஸ்சி சிறப்பான தொடக்கத்தை தந்தனர். சிம்மன்ஸ் ஆரம்பத்திலிருந்தே பவுண்டரிகளாக விளாசி ரன்ரெட்டை தக்கவைத்திருந்தார். ஹஸ்சி பெரிதாக ரன் செர்கவில்லை. பின்னர் களமிறங்கிய ராயுடு 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி செர்ந்த ரோகித் சர்மா சிம்மன்ஸ் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 18 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா கெட்ச் ஆனார். சிம்மனஸ் இந்த ஐபிஎல் சிசனில் முதல் சதத்தை கடந்தார். அவர் 61 பந்துகளில் 100ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டத்தில் நிலைத்திருந்தார். கடைசியாக ஆட்டத்தை போல்லார்ட் சிக்சர் அடித்து முடித்து வைத்தார்.

இதனால் மும்பை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. சிம்மன்ஸ் இந்த ஐபிஎல் போட்டிக்கான முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற சிம்மன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: என்து சிறந்த ஆட்டம் இதுவாகும். செஞ்சூறி அடித்தது மிகவும் சிறப்பானவை. இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் முதல் சதம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த வித நெருக்கடியும் இல்லாமல் ஆடியதால் அதிரடியை வெளிப்படுத்த முடிந்தது. எனது ஆட்டம் மூலம் மும்பை அணி வெற்றி பெற்றது திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். மும்பை அணி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி அணியை சந்திக்கிறது இந்த ஆட்டத்திலும் வெற்றி முக்கியமானது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்