பாட்மிண்டன் தரவரிசை: ஸ்ரீகாந்த - சிந்து முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 30 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே 31- சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த உபேர் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்ததன் மூலம் சிந்து தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். 

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்றதோடு நடப்பு உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக்கை வீழ்த்தியதன் மூலம் 8-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் சாய்னா. சீனாவின் லீ ஸியூரூய் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 

ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத் தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 5 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரவரிசையாகும். தாமஸ் கோப்பை போட்டியில் தான் விளையாடிய 3 ஆட்டங்களில் இரண்டில் தோற்றபோதும், ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார் ஸ்ரீகாந்த். இந்தியாவின் மற்றொரு வீரரான காஷ்யப் 21-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மலேசியாவின் லீ சாங் வெய் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: