ஸ்பெல்லிங் பீ போட்டி: அமெரிக்க இந்தியச் சிறுவர்களுக்கு பரிசு

சனிக்கிழமை, 31 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன்.1 - ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ஸ்பெல்லிங் பீ தேசிய போட்டியில் அமெரிக்க இந்திய சிறுவர்கள் ஸ்ரீராம் ஜெ ஹத்வார், அன்சுன் சுஜோய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

இப்போட்டியில் தொடர்ந்து 7 முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்துள்ளனர். தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான இப்போட்டியை லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். 14 வயதாகும் ஸ்ரீராம் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். டெக்சாஸை சேர்ந்த அன்சுனுக்கு 13 வயதாகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டைப் போலவே ஸ்ரீராம், அன்சுன், மிசௌரியைச் சேர்ந்த கோகுல் வெங்கடாசலம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஸ்ரீராம், அன்சுன் ஆகியோர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். இதற்கு முன்பு கடைசியாக 1962-ல் இருவர் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். 

இப்போட்டியில் மொத்தம் 12 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதில் 6 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: