Idhayam Matrimony

நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      அரசியல்
Arun-raj-2025-12-21

கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து உரிய நேரத்தில முடிவு எடுக்கப்படும். கடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் அந்த குழுவை அமைப்பார்.

விஜய் இப்போது நடிகர் கிடையாது. அவர் முன்னாள் நடிகர். நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென வந்திருக்கிறார். ஈரோட்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வந்தார்கள். அவர்கள் என்ன நடிகரைப் பார்க்கவா வந்தார்கள்.

தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கும் த.வெ.க. தலைவரைப் பார்க்க வந்தார்கள். தமிழ்நாட்டிற்கு மாற்றம் வேண்டும் என வந்த தொண்டர்கள். நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது, மனிதர்கள். நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்.

அரசியலில் இன்னும் சில பேர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெரியாரின் பகுத்தறிவுடைய உண்மையான தொண்டர்கள். தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தால் கண்டிப்பாக மீடியா பார்வை வரும். ஆனால் நாங்கள் அத்தகைய அரசியல் செய்பவர்கள் அல்ல. இவ்வாறு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து