ஐ.பி.எல். இறுதிப்போட்டி: பஞ்சாப் - கொல்கத்தா இன்று மோதல்

சனிக்கிழமை, 31 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஜூன்.1 -பெங்களூரில் இன்று  ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கம்பீர் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேவாக் சதத்துடன் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முதன்முதலாகத் தகுதி பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தாவையும் வீழ்த்த தயாராகி வருகிறது.

முதல் பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட கிங்ஸ் லெவன் பலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களது பலத்தை நிரூபித்தது. லீக் சுற்றுப் போட்டிகளில் இரு அணிகளுமே ஒன்றை எதிர்த்து மற்றொன்று தோல்விகளையும், வெற்றிகளையும் பெற்றுள்ளது. அபுதாபியில் கிங்ஸ் லெவன் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்த, கட்டாக் மைதானத்தில் மே 11 ஆம் தேதி கொல்கத்தா அணி கிங்ஸ் லெவனை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழி தீர்த்தது.

ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்ற லீக் சுற்றுகளில் 5 போட்டிகளிலும் வென்றது. மாறாக கொல்கத்தா இந்தியாவில் விளையாடிய சுற்றில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது.2012ஆம் ஆண்டு சென்னையை வீழ்த்தி கொல்கத்தா கோப்பையை வென்றது. நாளைய இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பந்து வீச்சு மேம்பட வேண்டும், நேற்று ரெய்னா கிங்ஸ் லெவன் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 25 பந்துகளில் 87 ரன்களை விளாச, முதல் 6 ஓவர்களிலேயே ஸ்கோர் 100 ரன்களை எட்டியது. ஆனால் கிங்ஸ் லெவன் கேப்டன் பெய்லி, ரெய்னாவை ரன் அவுட் செய்ய சென்னையின் நடுக்கள வீரர்கள் சொதப்ப தோல்வி தழுவியது சென்னை. தோனியின் பேட்டிங் மந்தமானதும் சென்னையின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

மிட்செல் ஜான்சன், பர்வீந்தர் அவானா இன்று நிச்சயம் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுவர். உத்தப்பா இருக்கும் ஃபார்மில் நிச்சயம் அவர் பெரிய சவாலாக இவர்களுக்குத் திகழ்வார் என்று நம்பலாம். கம்பீர், யூசுப் பத்தான், மணீஷ் பாண்டே ஆகியோர் என்ன செய்வார்கள் என்று எளிதில் முன் கூட்டியே தீர்மானிக்கவியலாது.அதேபோல் கொல்கத்தாவின் மோர்னி மோர்கெல், உமேஷ் யாதவ் மற்றும் சுனில் நரைன், பியூஷ் சாவ்லா ஆகியோர் சேவாகின் ஆகிருதியை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். மற்றுமொரு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது. ஆனால் கிங்ஸ் லெவன் அணியிடம் தொடர்ந்து காணப்படும் உத்வேகம் மற்றும் விறுவிறுப்பு கொல்கத்தா அணியில் அவ்வப்போது மறைந்து விடுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: