முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கூட்டத்தில் கறுப்புப் பணம் மீட்பு குறித்து பரிசீலனை

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்4 - வெளிநாடுகளில் இந்தியா வைச் சேர்ந்தோர் பதுக்கி வைத் துள்ள கறுப்புப் பணத்தை மீட்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில்  நடை பெற்றது.

கூட்டத்திற்கு பின்பு குழுவின் தலைவர் எம்.பி.ஷா கூறுகையில்,உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கறுப்புப் பணத்தை மீட்பது குறித்து விரிவாக விவாதித்தோம்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக் கப்படும் என்றார்.

இக்கூட்டம் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட் டுள்ள அறிவிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மீட்பதற்கான வழிமுறைகளும் கூட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது.

முதல் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்று விவாதிப்பதற்கான இரண்டாவது கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்