முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்கார சிறுமியை கிண்டலடித்த நீதிபதி சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

மாண்டானா, ஜூன் 6 - அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை கிண்டலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. 

அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ் நகர பள்ளியில் கடந்த ஆண்டு படித்து வந்த 14 வயது சிறுமி செரிஸ். இந்த பள்ளி ஆசிரியராக இருந்த ஸ்டாசிடீன் ராம்போல்ட் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பான வழ

க்கு பில்லிங்ஸ் மாவட்ட நீதிபதி ஜிடோட் பாக்கின் முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கு விசாரணையின் போது சிறுமி பற்றி நீதிபதி டோட் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியை பார்த்தால் சின்ன பெண் போல தெரியவில்லை என்று டோட் நக்கலாக கூறியுள்ளார். மேலும் ஆசிரியர் ராம்போல்டுக்கு வெறும் 30 நாள் சிறை தண்டனையை அவர் வழங்கினார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். கொதித்துப் போன குடும்பத்தினர் மான்டானாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி டோட்பாக் தனது தவறான நடவடிக்கை மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து விட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணை வேறொரு நீதிபதியின் கீழ் நடைபெறும் என்றும் சர்ச்சைக்குரிய நீதிபதி 31 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் கூறியது. நீதிபதி டோட் ஜூலை 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago