முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கருத்தால் சர்ச்சை

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பெங்களூர், ஜூன் 8 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாக கர்நாடக பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

காவிரி பிரச்சினை தொடர்பாக வெளியிடப்பட்ட நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா பல சட்ட போராட்டங்களை நடத்தினார். இதில் அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கெஜட்டில் வெளியானது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். இறுதி தீர்ப்பு கெஜட்டில் வெளியானதை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழு ஆகியவை அமைக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் மன்மோகன்சிங் அரசு அதை செய்யவே இல்லை. 

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை மத்திய நீர்வளத்துறை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும் பிரதமரை சந்தித்து முறையிடுவோம் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். 

இந்த நிலையில் நேற்று பெங்களூரில் பா.ஜ.க முக்கிய தலைவர் ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் உமாபாரதி தம்மிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தை கர்நாடக மக்களிடம் சொல்லுங்கள் என்று உமாபாரதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். உமாபாரதி கூறியதாக இவர் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் உமா பாரதி அப்படி சொன்னாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டித்து கர்நாடகத்தில் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் போராட்டம் நடத்த தொடங்கி விட்டார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்றாலே வட்டால் நாகராஜ் போன்றவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் போலும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago