முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டண உயர்வால் கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.9 - ரயில் கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம் கிடைக்கும் என்று சதானந்த கவுடா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு குறித்து அவர் கூறுயதாவது:

கடந்த காலங்களில் புதிய திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை. புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அவையில் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அவ்வாறு அறிவித்தால், அது நெருக்கடியில் உள்ள ரயில்வே துறைக்கு அநீதி இழைப்பது ஆகிவிடும். ஏற்கெனவே ரயில்வே துறை மேற்கொண்டு வரும் திட்டங்களை முடிப்பதற்கே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது. கவர்ச்சித் திட்டங்களும், நிர்வாக சீர்கேடும் ரயில்வே துறையை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில், 3,700 கி.மீ அளவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ரூ.41,000 கோடி செலவிட்டுள்ளது. ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், தேவை கருதியே அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம் கிடைக்கும், என்றார் கவுடா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago