முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஜூலை.12 - ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்ற்ச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று ஆப்கான் விரைந்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய அதிபராக ஹமீத் கர்சாய் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் மிகவிரைவில் முடிகிறது. அவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் 14-ஆம் தேதி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. புதிய அதிபர் தேர்தலில் முன்னாள் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவும், முன்னாள் உல வங்கி ஆலோசகர் அஷ்ரப் கானி அகமது சாயும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என்று இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டங்களின் போது பல்வேறு வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

மேலும், தலிபான் தீவிரவாதிகளும் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றடைந்தார். அங்கு அவர் ஆப்கான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது குறித்து ஜான் கெர்ரி கூறுகையில், ஆப்கானில் ஸ்திரத்தன்மை ஏர்பட தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் களையப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது குறித்து வேட்பாளர்கள் மற்றும் அதிபர் ஹமீது கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.

அத்துடன், ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படையினரின் நிலை குறித்தும் அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது தேவை குறித்தும் ஆப்கன் அதிபருடன் விவாதிப்பேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்