முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு

திங்கட்கிழமை, 14 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - சட்டசபையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார். அதன் மீது விவதாம் நடந்தது. அப்போது தொழில் துறை அமைச்சர் தங்கமணி பதிலுரை வருமாறு:-

எங்களுக்குத் தாயாய், தந்தையாய், நல்வழிகாட்டும் ஆசானாய்,

எங்கள் பிழைகளை மன்னித்து வாழ்விற்கும் இறைவனாய்,

உள்ளிருந்து இயக்கும் உந்து சக்தியாய்,

ஒன்றரைக்கோடி தொண்டர்களின் உயிர் மூச்சாய்

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தலைவியாய்

தமிழகத்தின் தவப்பயனாய் திகழும் புகழுக்குரிய

நாங்கள் நித்தம் வழிப்படும் - எங்கள் குல தெய்வம்

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி

அம்மா அவர்களின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்குகிறேன்.

வயது வித்தியாசம் இன்றி, எல்லோரும் உச்சரிப்பது அம்மா என்ற வார்த்தையை தான்,

பள்ளிக்கு சென்றால் அம்மா,

முதியோர் இல்லத்திற்கு சென்றால் அம்மா,

கோவிலுக்கு போனால் அம்மா,

தோட்டத்திற்கு சென்றாலும் அம்மா,

கல்லூரிக்கு சென்றாலும் அம்மா,

மருத்துவமனைக்கு சென்றாலும் அம்மா,

பெண்கள் ஒன்றாக கூடினால் அம்மா,

உணவகத்திற்கு சென்றால் அம்மா,

தவித்த வாயிக்கு தண்ணீர் குடிக்க சென்றால் அம்மா,

மருந்துக்கடைக்கு சென்றால் அம்மா,

மளிகைக் கடைக்கு சென்றாலும் அம்மா,

காய்கறி வாங்க சென்றாலும் அம்மா,

அறுசுவைக்கும் அம்மா,

எதிரிகளை புறமுதுகிட்டு விரட்டியடிக்கும் நம் அம்மா தான்,

இன்று இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுத்தந்தவரும் நம் அம்மா தானே.

தமிழ்நாடு மக்கள் மட்டுமல்லாமல், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் அம்மா.

தமிழ் மக்களுக்கு ஒரு துயரம் என்றால், துன்பத்தைத் துடைப்பதற்கு, நீளுகின்ற முதல் கரம் அம்மா அவர்களின் பொற்கரம் தானே.

உதடுகள் உச்சரிக்கும், சொல்லாக நம் அம்மா தான் இருக்கின்றார்கள்.

இந்த பெருமை எந்த தலைவருக்கும் இல்லை அம்மா.

மாநில கட்சியை தேசிய கட்சியாக்கியதும் நம் அம்மா.

தேசிய கட்சியை மாநில கட்சியாக ஆக்கியதும் நம் அம்மா.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், இறக்குமதி அளவு குறைந்து ஏற்றுமதி அளவு அதிகரித்தால்தான் அதன் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

இந்தியாவின் பொருளாதாரம் இந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு கடந்தக்கால மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணமாகும். அதில் தி.மு.க.-வின் பங்கு உண்டு. ஏனென்றால் """"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசில் பங்குபெற்றுள்ள தி.மு.க.-வும் பெரும் பங்காற்றி உள்ளது என்பதை ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியானால், வீழ்ச்சிக்கும் தி.மு.க. தான் காரணம் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களோடும், உள்நாட்டு நிறுவனங்களோடும், ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, தொழில் முனைவோர்களின், இலகுவான முயற்சிக்கு, கட்டமைப்பு வசதிகளை, திட்டமிட்டு உருவாக்கித் தருவதிலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினார்கள்.

தமிழகத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து தொழில்கள் பெருக வேண்டுமென்பதற்காக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான், முதன்முதலாக பன்னாட்டு கம்பெனிகளான ஃபோர்டு, ஹூண்டாய், செயின்ட் கோபைன் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கிட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் வரலாற்றில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூபாய் 31,706 கோடி அளவிற்கான முதலீடும், ஒற்றைச்சாளர முறை மூலமாக 35 திட்டங்கள் சேர்ந்து, ஆகமொத்தம், கடந்த 3 ஆண்டுகளில் 68 திட்டங்களில் தமிழகத்தில் ஈர்த்த மொத்த முதலீடு 46,602.72 கோடி முதலீடும், கிட்டத்தட்ட 1,62,667 அளவிற்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி தொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்கி மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சரித்திர சாதனை படைத்துள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளைய தலைமுறையினர் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று சிலர் ஆரூடம் கூறி கனவு கொண்டிருந்தார்கள். ஆனால், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த மூன்றாண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளதால்தான் இளைய தலைமுறை வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக அம்மா அவர்களுக்கு வாக்களித்து இனி தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இடமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

ஆக, இனி வருங்காலங்களில் தமிழகம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய தலைமையில் தான் இயங்கும் என்பதை வாக்காளர்கள் நிருபித்து காட்டிவிட்டார்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதியும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களினாலும், உழைப்பினாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இப்படி மக்களுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்ட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை மக்களும் சரி, கழகத்தினரும் சரி, கழக தொண்டர்களும் சரி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தான் நாங்கள் எல்லோரும் கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கை.

தன் குடும்பத்தையே நிர்வகிக்க முடியாமல், தடுமாறுகின்ற தலைவர்களுக்கு மத்தியில் - தள்ளாடுகின்ற தலைவர்களுக்கு மத்தியில் - எந்த அரசியல் இயக்கத்திலும், ஒரே நேரத்தில் கட்சி, ஆட்சி, நாடு இந்த மூன்றுக்கும் ஒருவர் மக்களின் மகத்தான பேராதரவை பெற்ற ஒரே தலைவராக வாய்த்திட்ட வரலாறு இந்தியாவிலேயே நம் அம்மா ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.

""""எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்""

- என்ற இலட்சியத்தை மனதிலே தாங்கி நாளும் உழைக்கும் நம் அம்மா-வை இனி இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டை அம்மா நாடு என்று அழைக்கின்ற நாள் வெகுதூரத்தில் இல்லை.

2013-2014 ஆம் ஆண்டில், Union Planning Commission மத்திய திட்டக்குழு அண்மையில் உற்பத்தி துறையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பற்றிய அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சி விகிதம் 6.13 சதவீதம். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.74 சதவீதம் ஆகும்.

2013-2014ல் தமிழ்நாட்டில் GSDP (நிலையான விலையில்) ரூ. 4,78,975 கோடி பெற்று இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இதுவே, மைனாரிட்டி தி.மு.க. அரசின் 2009-2010 ஆம் ஆண்டில் ரூ. 3,56,632 கோடி பெற்று இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான நல்லாட்சியில் தமிழகம், 2013-2014 ஆம் ஆண்டைய Growth rate-ன் சதவீதத்தை பொருத்தவரையில், All India Average Growth Rate-ஐ விட நன்றாக உள்ளது.

அதாவது,

வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு 8.93 சதவீதம் - All India - 0.91 சதவீதம்.

உற்பத்தித்துறையில் தமிழ்நாடு 3.53 சதவீதம் - All India - (-0.71) சதவீதம்.

சேவைத்துறையில் தமிழ்நாடு 8.26 சதவீதம் - All India - 7.0 சதவீதம்.

11-07-2014ல் அன்று தே.மு.தி.க. உறுப்பினர் திரு. வெங்கடேசன் அவர்கள் பேசுகின்றபோது, வெளிமாநிலத்தினர் அதிகமாக தமிழகத்தில் வேலை செய்வதாகவும், ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று உண்மைக்கு மாறான செய்தியை அவர் சொன்னார். தமிழகத்தில் உள்ள ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 90 சதவீதமும், மற்ற மாநிலத்தினர் 10 சதவீதமும் தான் பணிபுரிகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்யாறு சிறப்பு பொருளாதார காலணி தொழிற்சாலை, அப்பலோ டையர்ஸ், செயின் கோபைன், ரேனால்டு நிசான், ஃபோர்டு, சாம்சங், தோஷிபா, ஹூண்டாய், எம்.ஆர்.எப் டையர்ஸ், ஜே.கே. டையர்ஸ் மற்றும் மிச்சிலின் ஆகிய 11 தொழிற்சாலை திட்டங்களில் மட்டும், இதுவரை நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பாக 39,330 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 36,051 நபர்களுக்கும் (91.66ரூ), தமிழகம் அல்லாத பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 3,279 நபர்களுக்கும் (8.34ரூ) வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

சிப்காட் வளாகத்தில் 2,235 தொழில் நிறுவனங்கள் ரூபாய் 1,03,000 கோடி முதலீட்டில், 5,97,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருக்கின்றார்கள். அதிலும், 84 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், மற்ற மாநிலத்தினர் 16 சதவீதமும் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவரும் மற்றும் மாண்புமிகு உறுப்பினர் ஸ்டாலின் அவர்களும், தமிழகத்திலிருந்து முதலீட்டாளர்கள் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதாக ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பியும், அறிக்கை விட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், எந்த எந்த தொழிற்சாலைகள் எவ்வளவு முதலீட்டில் அங்கே சென்றார்கள் என்கின்ற விவரத்தை கொடுக்கவில்லை.

மாண்புமிகு கர்நாடக முதல்வர் அவர்களும், அதிகாரிகளும், கோவையில் நடத்திய ஒரு கூட்டத்தில் அதில் கலந்து கொண்ட அனைவரிடமும் விருப்ப வெளிப்பாட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் சிலர் அதனை கொடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் எல்லாம் கர்நாடகத்தில் முதலீடு செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதிலே, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற கட்சித்தலைவரும் எப்படியாவது இங்கிருந்து அங்கே முதலீடுகள் போய்விட்டால் பரவாயில்லை என்று துண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் சாலை வசதி முதலிலே சரியாக இருக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் கூட, திம்மம் வனப்பகுதியில் லாரி பழுதடைந்ததால், சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு, 14 மணி நேரம் போக்குவரத்தே இல்லாத நிலை அங்கு நிலவியது. இப்படிப்பட்ட போக்குவரத்து வசதியைக் கொண்டு அங்கு முதலீட்டாளர்கள் எப்படி செல்வார்கள். தமிழகத்திலிருந்து எந்த முதலீட்டாளரும் கர்நாடகாவிற்கு சென்று முதலீடு செய்ய தயாராக இல்லை என்று மறுநாளே பல்வேறு தொழிலதிபர்கள் தெரிவித்ததாக பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.

கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில், சென்னை மெட்ரோ இரயிலுக்கான கோச்சுகளை தயாரிக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் தொடங்கபடாமல் ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு சென்றுவிட்டது. ஆனால், அங்கு உற்பத்தியாகும் கோச்சுகள் சென்னை மெட்ரோ இரயிலுக்குத்தான் வருகின்றன. இவர்களது ஆட்சியில்தான் தொழிலதிபர்கள் பிற மாநிலத்திற்கு சென்றார்களே தவிர, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், எந்த தொழிலதிபர்களும் வெளிமாநிலத்திற்கு செல்ல மாட்டார்கள்.

இது போட்டி நிறைந்த உலகம். சென்னை துறைமுகத்தையும், சென்னை விமான நிலையத்தையும் பயன்படுத்திக் கொண்டு, நாங்கள் குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரி சலுகையும் அதிகமாக தருகிறோம் என்று சொல்லி தொழிலதிபர்களை ஆந்திர மாநில தடாவிற்கு அழைக்கின்றார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆடு மேய்கிற மாதிரி - அண்ணணுக்கு பொன்னும் பார்த்த மாதிரி என்று சொல்வார்கள். அதுபோல, ஆந்திர முதல்வர் இந்த வழியாக சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம், தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகின்றேன் என்று நம் தொழிலதிபர்களை அழைத்து பேசுவார். ஆனால், இதையெல்லாம் மீறி, தொழிலதிபர்கள் அத்தனை பேரும் ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால், அதற்கு உகந்த இடம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி புரியும் தமிழகம் தான், காரணம் தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு, பயிற்சி பெற்ற திறன் மிக்க தொழிலாளர்கள், உறுதியான தலைமை ஆகிய காரணங்களினால் தொழில் துவங்கிட முன்வருகின்றார்கள். எனவே, எத்தனை முதல்வர்கள் இங்கு வந்து அழைத்தாலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யுங்கள் என்று எதிர்கட்சிகள் எல்லாம் தூண்டிவிட்டாலும், அதை மீறி ஒவ்வொரு தொழிலும் தமிழகத்திற்கு தான் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 கொண்டு வந்தததைப் பற்றி தி.மு.க. தலைவர் பூஜ்ஜியத்திலே ராஜ்ஜியம் என்று கூறியிருக்கின்றார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அப்படி அறிக்கை விட்டு கொண்டிருந்த தலைவருக்கு பாராளுமன்ற தேர்தல் பரிசாக பூஜ்ஜியத்தை வாங்கி கொடுத்தார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியில், ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

ஜப்பான் முதலீட்டார்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அதற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலும், நிர்வாக திறமையும், சட்டத்தின் ஆட்சியும், வெளிப்படையான கொள்கையும்தான் காரணம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல, ஜப்பான் நாட்டு கம்பெனிகள் தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடம் தமிழ்நாடு தான், தற்போது ஜப்பான் நாட்டின் 523 கம்பெனிகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில்,

அக்டோபர் 2010ல் - 240 ஜப்பானிய கம்பெனிகள்,

அக்டோபர் 2013ல் - 523 ஜப்பானிய கம்பெனிகள் - என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு:

மகாராஷ்ரா - 397

ஹரியானா - 325

கர்நாடகா - 299

ஆந்திரா - 229

டெல்லி - 175

கேரளா - 105

மேற்கு வங்காளம் - 96

மத்திய பிரதேசம் - 25

ஜார்க்கண்ட் - 24

பஞ்சாப் - 19

ஓரிசா - 15

உத்ரகாண்ட் - 14

மற்ற பிற மாநிலங்கள் - 61

தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்த விவரம் (2006 - 2011)

`

கம்பெனி மதிப்பீடு (கோடியில்) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நாள்

கேப்ரோ வெகிகள் 300 8-3-2007

சிக்நெட் சோலார் 2,000 17-3-2008

மோசர்பியர் 2,000 9-6-2008

அசோக் லேலண்டு 4,150 8-9-2008

மிச்சிலின் இந்தியா 4,000 16-11-2009

ஹர்ஷா குரூப் 1,500 29-9-2008 மற்றும் 20-11-2009

வீடியோகான் 1,600 4-8-2010

டாடா ஸ்டீல் 2,500 28-6-2007

எம். பி. பி. எல். 1,373 14-7-2007

ஐ.ஓ.சி. 4,320

மொத்தம் 23,743

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜப்பானிய கம்பெனிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்தகால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, மொத்த முதலீடு 21 ஆயிரம் கோடி அளவிற்கு மட்டுமே. ஆனால், மாண்புமிகு உறுப்பினர் ஸ்டாலின் அவர்கள் 66 ஆயிரம் கோடி கொண்டு வந்ததாக பொதுக்கூட்டங்களிலும், பத்திரிக்கைகளிலும் சொல்லி கொண்டு வந்திருக்கிறார். நான் ஆதாரத்தோடு புள்ளி விவரங்களை தர தயாராக இருக்கின்றேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லியதை இங்கு நிருப்பிக்க முடியுமா.

அதேபோல, இந்தியாவிலேயே அதிக கார் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் இயங்குகின்ற தமிழகத்தில் தான், கிட்டத்தட்ட வருடத்திற்கு 13,80,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு முதலிடம் வகிக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவை அனைத்திற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் சிறப்பான வழிகாட்டுதல்களே காரணமாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில், நல்ல நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மின்னணு வன்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடத்தையும், மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தையும், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.

இந்தியாவில், தானியங்கி வாகனங்கள், மற்றும் வாகன உதிரி பாகங்கள், தயாரிப்பில் 30 சதவீதமும், சரக்கு வாகனம் தயாரிப்பில், 17 சதவீதமும், பயணிகள் கார், மற்றும் இருசக்கர வாகனத் தயாரிப்பில், 20 சதவீதமும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்தி 1 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டை கொண்டு வருவதற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளி விவரப்படி, தமிழகம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இந்த மூன்று வருட ஆட்சிக்காலத்தில் (ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2014 வரை) ரூபாய் 2,22,603.39 கோடி கூடுதல் முதலீட்டினை ஈர்த்து இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

சிப்காட்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற¦றும் உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றத்தில் முழு பங்களிப்பை சிப்காட் நிறுவனம் செய்து வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்மாவட்டங்களில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த சிறப்பு தொகுப்பு சலுகை மூலமாக பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து வருகிறது. மேலும், பணி புரியும் பெண்களுக்கு தங்குமிடம் வசதி, குழந்தைகள் காப்பகம், மருத்துவ மையம், பயிற்சி மையம், சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிப்காட்டின் இந்த ஆண்டு நிகர லாபம் ரூபாய் 227.68 கோடி ஈட்டியுள்ளது.

சிறப்புத் தொழில் பெருவழிச் சாலை -

1. சென்னை-திருப்பெரும்புதூர்-இராணிப்பேட்டை - ஓசூர்.

2. மதுரை- தூத்துக்குடி மற¦றும் கோயம்புத்தூர் - சேலம்.

ஆகியவற்றிற்கு ஆய்வறிக்கை பணிகள் முடிவுற்றவுடன் தொழில¦ துறையில் பின்தங்கிய தென்மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தவும், நிலைத்த தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தவும், மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத்தையொட்டிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை ஏற¦படுத்தவும் சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள¦ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிலவங்கி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டிற்கு மேலும் பல தொழிற்சாலைகளைக் கவரும் வகையிலும் தொழில் முனைவோர்களுக்கு தேவைப்படும் தொழில் மனைகளை உடனடியாக வழங்கும் பொருட்டும் சிப்காட் நிறுவனம் 52,000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலவங்கி ஒன்றினை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையும், இந்த நில வங்கி விவசாய நிலங்களை கவனமாக தவிர்த்து, தரிசு மற்றும் சாகுபடிக்கு உதவாத நிலங்களை மட்டும் தேர்வு செய்து உருவாக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர். பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்