முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீதியில் மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள்!

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூலை 21 - மலேசியாவின் எம்.எச்.370 விமானம் மாயமாகி அதன் மர்மமே விடுபடாத நிலையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் என்றாலே மக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் கடும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளதாக கோலாலம்பூரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழனன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த எம்.எச்.17 விமானம் உக்ரைன் அருகே டாண்ட்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர். இதில் 36 ஆஸ்திரேலியா பயணிகளும் அடங்குவர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மலேசிய ஏர்லைன்ஸில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், "இப்போது மலேசிய ஏர்லைன்ஸ் என்றாலே மக்களுக்கும், ஊழியர்களுக்கும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
"சீருடை அணிந்து வேலை செய்யும்போது ஒன்றும் நடக்கவில்லை என்று நாங்கள் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் உண்மையில் பயந்துதான் போயிருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony