முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் வெற்றி உழைப்புக்கு கிடைத்த வெகுமதி: டோனி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை.23 - இங்கிலாந்துக்கு எதிரான லார்டஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 28-ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன்என்ற இலக்கை நிர்ணையித்தது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து இருந்தது. வெற்றிக்கு மேலும் 214 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடியது. இஷாந்த் சர்மாவின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. அந்த அணி 88.2 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 95 ரன்னில் அபார வெற்றி பெறஅறது. ஜோ ரூட் அதிகபட்சமாக 66 ரன் எடுத்தார். இஷாந்த் சர்மா 74 ரன் கொடுத்து 7 விக்கெட்டை கைப்பற்றினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிவெற்றியை பெற்றது.இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி மிகவும் கடுமையாக உழைத்தது. அதற்கு கிடைத்த வெகுமதி தான் இந்த வெற்றி. இது மற்க்க இயலாத நினைவில் இருக்க கூடிய வெற்றியாகும். 2011-ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொம்டோம்.

இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு நெருக்கடியாக இருந்தது. டாஸ் தோற்றதால் முதலில் போட் செய்தோம். தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். முதல் இன்னிங்சில் புவனேஸ்வர் குமாரும், 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மாவும் அபாரமாக பந்துவீசினர். இதேபோல் ரகானே, முரளி விஜய், ஜடேஜா ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள். பீல்டிங் வியுகம் அமைத்து அது மாதிரி பந்து வீசுமாறு இஷாந்த் சர்மாவிடம் கூறி அவரை சரி செய்வது கடினமானது. ளார்ட்பால் வீசுமாறு கட்டாயப்படுத்தினேன். அதற்கு கிடைத்த பலன்தான் மொய்ன் அலி விக்கெட். அவரது உயரம் பவுன்சர் வீசுவதற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. மிகவும் நேர்த்தியுடன் வீசி விக்கெட்டுகளை சாய்த்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடிய கடைசி டெஸ்ட் இதுவாக இருக்கலாம். மீண்டும் இஙஅகு டெஸ்டில் ஆடுவதற்கான நிலை ஏற்படாமல் போகலாம். லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற இந்த வெற்றியை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இவ்வாறு டோனி கூறினார்.

இந்த வெற்றி மூலம் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டியை வருகிற 27-ஆம் தேதி சவுத்தம்டனில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்