முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் மீண்டும் 50 மீனவர்கள் சிறைபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

நாகப்பட்டினம், ஜூலை.30 - கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது 2-வது முறையாகும்.

நாகை மாவட்டம் கோடியக்கரையின் தென்கிழக்கே 5 விசைப்படகுகள், 2 நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும், நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து கியூ பிரிவு ஆய்வாளர் கென்னடி கூறுகையில், நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும், காங்கேசந்துரை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்