முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா திரும்ப மறுத்த அகதிகள் நவுரு தீவுக்கு மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

சிட்னி, ஆக.04 - இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் பயணம் செய்த இலங்கைத் தமிழர்கள் 157 பேர், நவுரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அதிகாரி ஸ்காட் மோரிஸன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுச்சேரி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் நவுரு தீவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். முன்னதாக அவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் சேர்ந்து வாழும் வகையில், திரும்பிச் செல்ல வாய்ப்பளித்தோம். ஆனால், கடந்த ஜூன் 29-ம் தேதி தங்களின் வழக்கறிஞர்களுடன் பேசிய 157 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். இது எங்களுக்கு ஏமாற்றம் அளித் துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம்.

இவர்கள் அனைவரும் அகதிகள் என்பது உறுதியாகும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கமாட்டோம். நவுரு தீவில்தான் குடியமர்த்துவோம். அவர்கள் அகதிகளாக இல்லாதபட்சத்தில், அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்