எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர், ஆக.18 - பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க சிங்கப்பூர் அரசு உதவ வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒருநாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். நேற்று முன் தினம் அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசியான் லூங், வெளியுறவு அமைச்சர் சண்முகம், முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உள்பட அந்நாட்டில் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா- சிங்கப்பூர் இடையிலான வர்த்தக உறவில் நீர்மேலாண்மை, நகர்புறங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பொருளாதார மேம்பாடு, ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
மேலும், இந்தியா- சிங்கப்பூர் இடையிலான உறவின் 50 ஆண்டுகால நட்பை முன்னிட்டு பொன்விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆசியான் அமைப்பில் இந்தியாவும், சிங்கப்பூரும் உறுப்பினர்களாக உள்லன. இரு நாடுகளும் இணைந்தால் பல்வேறு திட்டங்களையும் சாதிக்கலாம். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.7060 கோடி கனவு திட்டமான 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் பணியில் சிங்கப்பூர் அரசு உதவ வேண்டும். இரு நாடுகளும் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025