இந்தியா - பாக்., இடையே பேச்சுவார்த்தை திடீர் ரத்து

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.19 - காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் தொடர்பு கொண்டு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்துவிட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே உள்ள காஷ்மீர் உள்பட பல்வேறு பிரச்சனைகல் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர் மட்டத்தில் வருகின்ற 25ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் காஷ்மீர் எல்லை பகுதியில் பாதிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி போர் நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணமடைந்தனர். மேலும் ஒரு ராணுவவீரர் படுகாயமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 10 நாட்களில் மட்டும் 11 முறை தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மட்டும் 2முறை தாக்குதல் நடத்தினர். மேலும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் இந்தியாவிற்கான பாதிஸ்தான் தூதர் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு இரு நாடுகளிடையே வருகின்ற 25ம் தேதி வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையையும் ரத்து செய்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: