முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் வழக்கில் நடிகர் ஜாக்கிசான் மகன் கைது

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

பீஜிங், ஆக.20 - போதை பொருல் வைத்திருந்ததாக பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகனையும், அவரது நண்பரையும் சீன போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இருவருமே நடிகர்கள்தான்.

ஹாலிவுட் உள்பட பல்வேறு படங்களிலும் பிரபல சண்டை நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜாக்கிசான். இவரது மகன் ஜெய்சி சான். 32 வயதான இவரும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். ஜெய்சி சான் மற்றும் அவரது நண்பரும், நடிகருமான கைகோ செங்துங் ஆகியோரை சீன போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சீன ஊடகங்களில் வெளியான செய்தியில் தெரிவித்திருப்பதாவது, இருவரும் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், அது தொடர்பான குற்ற நடவடிக்கையில் இரண்டு பேரும் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெய்சி சான் மற்றும் ஜாக்கிசானின் தரப்பு விளக்கங்களை கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் முழுமையான விவரங்கலை ஜெய்சிசானின் தரப்பினர் வெளியிட மறுத்து விட்டனர். கடந்த சில வருடங்களாக ஜெய்சி சானும், கைகோவும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக தைவானில் பிரபலம் அடையத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இருவரும் போதைப் பொருள் தொடர்பான குற்றத்தில் சிக்கி கைதாகியுள்ள சம்பவம் அவர்களது ரசிகர்கல் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் ஜாக்கிசான் மகன் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ஜாக்கி சானின் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சீன அரசு பிரபலங்களை குறி வைத்து போதை தடுப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago