முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

டோக்கியோ செப்.02 - இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

5 நால் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்ரும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற்கொண்டு உள்ளது. நல்லாட்சிக்கே எனது அரசு முக்கியத்துவம் அளிக்கும். தொழில் நுட்பத்துடனான அரசை உருவாக்கவே முயன்ரு வருகிறோம். நான் பிரதமரான பிறகு என் மீது மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன. நல்ல தொரு சூழ்நிலையை தொழில் அதிபர்கல் விரும்புகிறார்கல். அதனை உருவாக்கி தருவதே எங்கள் பொறுப்பு.

குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் எனது ரத்தத்திலேயே வர்த்தகம் உள்ளது. முதல் காலாண்டில் எங்களின் வர்த்தக வளர்ச்சி எட்டியுள்ளது. ஜப்பானில் பல ஆண்டுகள் நிலையான அரசு உள்ளது. ஈனால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் நிலையான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. அதன் மூலம் வளர்ச்சி பெற ஜப்பான் உதவ வேண்டும். ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கல் நல்ல முதலீடு சூழலையும் துரிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வழி செய்து தரப்படும்.

இதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதால் விரைவில் அவைநல்ல பலன்களை ஏற்படுத்தும் ஜப்பான் முதலீடுகளை நிர்வாகிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மற்றொரு நாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்டின் மொவியையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்