கொலம்பியாவில் விமானம் நொறுங்கி 10 பேர் பலி

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பொகோடோ, செப்.9 - கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 2 பேர் விமானிகள். கொலம்பியாவின் அராராகு வாரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, புளோரன்சியா நகரின் மீது பறந்து கொண்டிருந்தபோது மாலை 3 மணியளவில் விமான கட்டுப்பாட்டு மையத் துடனான தொடர்பை இழந்தது.

இந்நிலையில், போர்டோ சாண்டாண்டர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அமேசான் காட்டுப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருப்பதாகவும், அதன் சிதைந்த பாகங்களை கண்டறிந்துள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அதில் பயணம் செய்த 8 பயணிகள் மற்றும் 2 பைலட்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: