இந்தியாவுக்கு உதவ தயார்: பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.09 - ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக கூரியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானத்தில் சென்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பலத்த மழை, வெள்ளப் பெருக்கில் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இருபுறங்களிலும் உயிரிழந்த மக்களுக்கு, பாகிஸ்தான் மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் மக்களின் துயரை குறைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: