இலங்கையில் ஜப்பான் பிரதமர்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப்.08 - ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே, 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொவும்புக்கு வந்த அவரை, இலங்கை அதிபர் ராஜபட்ச நேரில் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலவயத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 2-ஆம் கட்ட மேம்பாட்டு பணிகளை ராஜபட்சயுடன் இணைந்து அபே தொடங்கி வைத்தார். இலங்கைக்கு அதிக அளவு நிதியளிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. மனித உரிமை மீறல் பிரச்னையில், இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஜப்பான் நடுநிலை வகித்தது. கடந்த 24 ஆண்டுகளில், இலங்கை செல்லும் ஜப்பானின் முதல் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவார். தெற்காசிக் கண்டத்தில், ஜப்பானின் பரம எதிரி நாடாக கருதப்படும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது இலங்கைப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: