முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி வீரரின் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.10 - மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கேரளாவை ஒட்டிய கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இவர்களில் ஒருவரான மாசிமிலியானோ லட்டோர், மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மாதம் சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனு குறித்து பதிலளிக்கும்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இத்தாலி வீரர் டெல்லி சாணக்யபுரி காவல் நிலையத்தில் வாரம் ஒருமுறை சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் இரண்டு வாரங்களுக்கு தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்