முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக்கில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,  செப் 21:

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான சந்திப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு வெளியேறிய சீன படைகள், வெள்ளிக்கிழமை மீண்டும் அப்பகுதிக்குள் ஊடுருவி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையிலான சந்திப்பை தொடர்ந்து வியாழக்கிழமை இரவு லடாக்கின் சமர் பகுதியில் ஊடுருவியிருந்த சீன படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற தொடங்கினர். அதை தொடர்ந்து அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்களும் வெளியேற தொடங்கினர். இந்நிலையில் சீன ராணுவத்தினர் 35 பேர் திரும்பி வந்து சமரில் உள்ள சிறு குன்றின் மீது தங்கி உள்ளனர். அந்த பகுதி சீனாவுக்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே சீன ராணுவ வீரர்கள் 300  பேர் முகாமிட்டுள்ளனர். இதனால் லடாக்கில் இருந்து திரும்ப தொடங்கிய இந்திய வீரர்கள், அப்பகுதியி்ல் மீண்டும் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்