முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் மாணவர்களுக்கு போராட்ட குழுவினர் அழைப்பு

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஹாங்காங், அக் 12 - ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராடி வரும் குழுவினருக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து நீண்ட கால போராட்டத்துக்கு தயாராக வரும்படி தங்களது ஆதரவாளர்களுக்கு போராட்ட குழு தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சீன அரசின் சார்பாக ஹாங்காங் அதிகாரிகளுக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்த நிலையில் மாணவர் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை தூ ண்டி வருவதாக குற்றம் சாட்டி அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதன் காரணமாக அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. ஏற்கனவே இரண்டு வாரங்களாக நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் போராட்டத்தின் தீவிரம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளுடன் போராட்டத்துக்கு வரும் படி தனது ஆதரவாளர்களுக்கு போராட்ட குழுக்கின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதற்காக அரசை குறை கூறிய அவர்கள் சமரசத்துக்கு தாங்கள் இன்னமும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago