முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான்கான் மான் வேட்டை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, நவ 6 - நடிகர் சல்மான்கான் மீதான மான்வேட்டையாடிய வழக்கில் சுப்ரீ ம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்தது.

நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சினிமா படப்பிடிப்புக்காக சென்ற போது மான்வேட்டையாடினார். அப்போது 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டன. இந்த வழக்கில் வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் அவருக்கு கீழ் கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் உள்ளார். அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சல்மான்கான் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் படப்பிடிப்புக்கு லண்டன் செல்ல முடியவில்லை. நான் இந்த நாட்டிற்கு அதிகளவு வரி செலுத்தும் குடிமகன். எனவே தன் மீதான குற்றத்துக்கு தடை விதித்து வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடைந்தது. நேற்று நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீ ர்ப்பை ஒத்தி வைத்தனர். இதற்கிடையே மும்பையில் நடிகர் சல்மான்கான் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். 1 4 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை நேற்று மும்பை கோர்ட்டில் மீண்டும் தொடங்கியது. இதில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை மறு விசாரணை நடத்த கோரி கோர்ட்டு உத்த ரவிட்டதால் மீ ண்டும் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சல்மான்கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. முன்னணி நடிகரான சல்மான் கான் இந்த இரு வழக்குகளை எதிர்த்து நீண்டகாலமாக போராடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்