முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு ஏர்போர்ட்டில் வரவேற்பு

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.6:
லிங்கா படத்தின் பாடல் கட்சிக்கு வெளியீட்டு  துபாய் சென்று திரும்பிய ரஜினிக்கு  சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை ரசிகர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
.
கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள  படம் லிங்கா.   கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு  ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சோனாஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகியோர் கதாநாயகி களாக நடித்துள்ளனர்.  இந்தபடத் தின் படிப்பிடிப்புகள்  அனைத்தும் முடிக்கப்பட்டு பாடல்காட்சிகளுடன்  வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்த ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கும் இந்த படத்தின்  ஆடியோ சிடி  டிரைலர் கடந்த  1ம்தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து  லிங்கா படத்தின் பாடல்கள் துபாயில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தபடத்தின் பாடல் காட்சிகளில் ரஜினிகாந்த் நடிப்பதற்காக  துபாய் சென்றிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் பாடல் காட்சிகளில் பங்கேற்று விட்டு  துபாய் விமானம் மூலம் சென்னை வந்தார்.சென்னை விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வருவதை தெரிந்த ரசிகர்கள் நேற்று காலை முதல் விமான நிலைத்தல் கூடியிருந்தனர்.

கருப்பு பேண்ட்,கருப்பு சட்டை அணிந்து வந்த ரஜினிகாந்த்துக்கு  விமான நிலையத்தில் ரசிகர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனால் காலை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்