முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலனுடன் நடிகை பத்மபிரியா ரகசிய திருமணம்

புதன்கிழமை, 12 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ 13 - நியூயார்க்கில் காதலித்தவருடன் நடிகை பத்மபிரியா ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

மிருகம், பொக்கிஷம், பட்டியல், தவமாய் தவமிருந்து, பழஸிராஜா உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா. மிருகம் படத்தில் நடித்த போது இவருக்கும் இயக்குனர் சாமிக்கும் மோதல் ஏற்பட்டது. காட்சியின் போது சரியாக நடிக்கவில்லை என்று கூறி அவரது கன்னத்தில் சாமி அறைந்தார். இது சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து சில படங்களில் நடித்த பத்மபிரியாவுக்கு தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். அங்கும் வாய்ப்பு குறைந்ததால் பட்ட மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் பொது ஆட்சி முறை பொருளாதாரம் பற்றிய படிப்பை படித்து வந்த பத்மபிரியாவுக்கும், பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த ஜாஸ்மின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர் குஜராத்தை சேர்ந்தவர். தற்போது மும்பையில் மத்திய அரசின் இந்தியன் பாவர்ட்டி இராடிகேஷன் லேப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பத்மபிரியா - ஜாஸ்மின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணம் பற்றி ரகசியமாக வைத்திருந்தனர். மும்பையில் உள்ள ஹரியானா பவனில் இவர்கள் திருமணம் நேற்று நடந்தது.நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு நடிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பத்மபிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்