முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் அடைமழை: பக்தர்கள் கடும் அவதி

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ 14 - நெல்லூர், கிருஷ்ணா, விஜயநகரம், ஐதராபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. மழை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 7 செ.மீ மழை கொட்டியது. இதனால் சாலையில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளத்தால் சாக்கடை கால்வாயில் மூழ்கி ஒரு கர்ப்பிணி பெண் பலியானார். அவரது பெயர் சத்யவாணி(2 6). இவர் தனது மாமியாருடன் உறவினர் வீட்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு உப்பல் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் செகந்திராபாத் செல்லும் பஸ்சை பிடிக்க சாலையை கடந்த போது கால்வாயில் சிக்கினார். வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அவர் 50 மீட்டர் தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். திருப்பதியிலும் அடைமழை கொட்டியது. விடிய விடிய மழை நீடித்தது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதியடைந்தனர். கோவிலை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. கால்நடையாக வந்த பக்தர்கள் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மலை பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. தீயணைப்பு வீ ரர்கள் உடனுக்குடன் அதனை அப்புறப்படுத்தினர். வாகனங்கள் மெதுவாக செல்லும்படி தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்