மாட்டுத்தீவன ஊழல்: லல்லு மீதான சதி குற்றச்சாட்டு நீக்கம்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

ராஞ்சி, நவ 1 6 - மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லல்லு மீதான கூட்டு சதி குற்றச்சாட்டை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கு லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சுப்ரீ்ம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையானார். அப்பீல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே லல்லு மீதான 2வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு விசாரணை ஜார்கண்ட் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது லல்லு மீதான சதி திட்ட குற்றச்சாட்டை நீக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த குற்றச்சாட்டின் கீழ் முதல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு 2வது வழக்குக்கு பொருந்தாது. ஒரே குற்றச்சாட்டுக்கு 2 தடவை தண்டனை விதிக்க முடியாது. அதை சமயம் ஊழல் உள்ளிட்ட மற்ற 2 பிரிவுகளில் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் நீடிக்கும் என்று நீதிபதி கூறினார். ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோர்ட்டின் இந்த உத்தரவு லல்லுவுக்கு பாதி நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: