முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்மிண்டன் தரவரிசை 10-வது இடத்தில் ஸ்ரீகாந்த்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் தனது அதிகபட்ச தரவரிசையை தொட்டிருக்கிறார்.
21 வயதான ஸ்ரீகாந்த் சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் முன்னாள் ஒலிம்பிக் மாற்றும் உலக சாம்பியனான சீனாவின் லின் டானை தோற்கடித்ததன் மூலம் முதல்முறையாக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான காஷ்யப் தொடர்ந்து 17-வது இடத்தில் உள்ளார். எச்.எஸ்.பிரணாய் 3 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மகளிர் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 10-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி ஓர் இடம் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து