முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014
Image Unavailable

புது டெல்லி - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது கூட்டத்தொடர் அடுத்த மாதம் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததை சுட்டிக்காட்டி எதிர்கட்சியினரை பாராட்டிய பிரதமர் மோடி, அதேபோல் இந்த கூட்டத்தொடரையும் அமைதியாகவும், பயனுள்ளதாகவும் நடத்த உதவுமாறு கோரினார். இந்த கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 67 மசோதாக்களை நிறை வேற்ற மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
திட்ட கமிஷன் கலைப்பு, கருப்புப் பண விவகாரம், குஜராத் கலவரம் தொடர்பான நானாவதி கமிஷன் அறிக்கை, எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து