முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம்: 25 ஆயிரம் வீடுகள் இடிந்தன

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் - சீனாவில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற திபெத்தின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கார்ஷே பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் 2 5 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. அதனால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் 35பேர் அடங்கிய மீ ட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கி தவித்த 6,200 பேரை மீ ட்டு பத்திரமான இடங்களில் தங்க வைத்தனர். மீ ட்பு பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 6 ராணுவ விமானங்கள், 60 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 1000 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 54 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது டாகாங் நகரை மையமாக வைத்து ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து