முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிஸ் ஹெட் - ஸ்மித் அபாரம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

புதன்கிழமை, 7 ஜூன் 2023      விளையாட்டு
Australia 2023 06 07

Source: provided

லண்டன் : லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல்நாளில் ஆஸ்திரேலிய வீரர்கல் டிராவிஸ் ஹெட் - ஸ்மித் அபார ஆட்டத்தால் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

தீவிர பயிற்சி... 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

பந்துவீச்சு தேர்வு... 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கவாஜா , வார்னர் களமிறங்கினர். தொடக்கத்தில் சிராஜ் பந்துவீச்சில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் லபுசேன் களம் புகுந்தார். அவர் டேவிட் வார்னருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இருவரும் நிலைத்து ஆடினர்.

டிராவிஸ்- ஸ்மித்...

உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் வார்னர் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். தொடர்ந்து அவர் ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் 43 ரன்களில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

வலுவான நிலையில்...

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து இருவரும் அதிரடியாக ரன்கள் தொடங்கினார். சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து டிராவில் ஹெட் சதம் அடித்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து