முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

இதற்கும் மருத்துவமனை

அல்ஜீரியாவில், ஃபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்குள் மக்களை இழுக்க  தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

நெருப்புடா

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள  கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago