இந்திய ரயில்வே சுமார் 170 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது சரி இந்தியாவின் முதல் ரயில் எங்கே ஓடத் தொடங்கியது. அப்போது ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில் அது மும்பையில் நடந்தது. என்ன அது. இன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என மிக பிரமாண்டமாக மிளிரும் அந்த ரயில் நிலையம் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது. அதில்தான் இந்தியாவில் அன்றைய தினம் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியது.சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போரிபந்தர் மற்றும் தானே இடையே பயணிக்க165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் எடுத்துக் கொள்கிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.
பூமிக்கு அடியில் செலுத்தப்படும் கழிவுநீரால் நிலத்தட்டுகள் நகரும் நிகழ்வு ஏற்பட்டு, அதன்மூலம் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கழிவுநீரைச் செலுத்த பாதுகாப்பான இடங்கள் குறித்து ’ஸ்ட்ரெஸ் மேப்ஸ்’ என்று அழைக்கப்படும் வரைபடங்களை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீனஸ் மட்டும் சற்று பிரகாசமாக தெரியும். இதனால் இதை பகலிலேயே வெறும் கண்ணால் பார்க்க இயலும். எனவே இதை காலை நட்சத்திரம் அல்லது மாலை நட்சத்திரம் என்று கூட குறிப்பிடுவதுண்டு. அதையெல்லாம் விட முக்கியம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனை எதிர் கடிகார சுற்று முறையில் (வலமிருந்து இடமாக) சுற்றி வருகின்றன. ஆனால் வீனஸ் மட்டுமே கடிகார சுற்று (இடமிருந்து வலமாக) முறையில் சூரியனை சுற்றி வருகிறது.
சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


