முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை பாடும் நாய்கள்

பறவைகள் மட்டும்தான் பாடுமா, நாய்களில் சில இனங்களும் பாடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய வகை நாய்கள் நியூ கினியாவில் உள்ள காட்டு நாய்கள் இனமாகும். இவை அழிந்து விட்டதாக கருதிய வேளையில் தற்போது அவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காற்று தூய்மை

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

புதிய கேமரா

இங்கிலாந்தில் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமராவை கண்டுபிடித்துள்ளது. ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இல்லை.

இஸ்ரேலுக்கு விசா தராத நாடு

உலகில் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இரு நாடுகளின் விசா ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாகிஸ்தானியர்களுக்கு இஸ்ரேல் செல்வதற்கான விசா கிடைக்காது. அதே போல மேலும் ஒரு வித்தியாசமான சட்டம் அந்நாட்டில் உள்ளது. அங்கு கல்விக்காக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டால் அவர்கள் அரசுக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அது. எனவே பெரும்பாலான மக்கள் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்த பல்லி புதுசு

பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago