முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரூ. 714 கோடியாம்

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய். இதை ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவர் வாங்கியுள்ளார். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்தவர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போனதாம்.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

பேஸ்புக் எண்ணிக்கை

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

பட்டினி கிடந்தாலும் இளைக்காது

மீன்களில் அதிக கேட்கும் திறன் கொண்டது சுறா மீன்கள். சுறா இனங்களில் மொத்தம் 440 வகை இருக்கின்றன. அவற்றில் 30 வகையான சுறாக்கள் தான் மனிதர்களை தாக்கும் வல்லமை கொண்டவை. சுறாக்களின் வகைகளுக்கு ஏற்ப வளர்ச்சியிலும் சில சில மாறுபாடுகளை கொண்டிருக்கும். சில சுறாக்கள் 15 மீட்டர் நீளம் வளரும். சில சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வளரும். பொதுவாக சுறாக்கள் அனைத்தும் நான்கு வரிசை பற்களை கொண்டது. ஒரு பல் விழுந்தாலும் ஏழு எட்டு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் பல் முளைத்துவிடும். சுறாக்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் இல்லை என்றாலும் மந்தமான வெளிச்சத்தில் பார்வை திறன் கொண்டது. இவை 100 குட்டிகள் கூட போடும். குட்டி சுறாக்கள் பிறந்தது முதல்தானே இரை தேடிக்கொள்ளும். சுறாக்கள் மாதக்கணக்கில் பட்டினி இருந்தால் கூட அவை உடல் இளைத்து போகாத வண்ணம் அதன் உடம்பில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் அவற்றை பாதுகாக்கும். அழிந்த வரும் உயிரினங்கள் பட்டியலில் சுறாக்களும் இருப்பதால் அவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளாக மலையை குடைந்து சாலை அமைத்த மக்கள்

மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago