முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அழகு பொருள்

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். புளியுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால், முகம் பளிச்சென்று இருக்கும். மேலும்,இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் இதன் பங்கு அதிகம்.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தேவை முன்னெச்சரிக்கை

இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா?

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா... அது நமது நாட்டில் உள்ள இமயமலைதான். உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 30 சதவீதம் இமயமலையிலேயே அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரமும் இமயமலையில்தான் உள்ளது. இதில் ஆண்டு தோறும் சுமார் 1200 பேர் மலையேற்ற பயிற்சி  பெறுகின்றனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே.. மேலும்  கடந்த நூற்றாண்டில் எவரெஸ்ட் ஏற முயன்று சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பேர் இது போன்ற வழிகளில் உயிரிழக்கின்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட முடியாமல் இன்னும் பனியிலேயே புதைந்துள்ளன.

கதிர்வீச்சு அபாயம்

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா. ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவலாக, முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago